ஆயுதப்படை காவலர் மீது இளம்பெண் புகார்

காதலித்து பாலியல் ரீதியாக ஏமாற்றிய ஆயுதப்படை காவலர் மீது நடவடிக்கை எடுக்குமாறு காவல் ஆணையர் அலுவலகத்தில், இளம்பெண் ஒருவர் கண்ணீர் மல்க புகார் அளித்தார்.
ஆயுதப்படை காவலர் மீது இளம்பெண் புகார்
x
சென்னை அயனாவரத்தை சேர்ந்த ஓய்வு பெற்ற காவல் அதிகாரி விஜயகுமாரின் மகனும், ஆயுதப் படை பிரிவு காவலருமான வீரமணி ஏமாற்றியதாக, இளம்பெண் ஒருவர் புகார் அளித்தா​ர். 2017ஆம் ஆண்டில் காவலர் தேர்வு எழுதிய அவர், அதே தேர்வில் பங்கேற்ற வீரமணி ஆகிய  இருவரும் காதலித்துள்ளனர். திருமணம் செய்யப்போவதாக மற்றவர்களிடம் அறிமுகம் செய்து வைத்த நிலையில், இருவரும் தனிமையில் இருந்ததாக கூறும் அந்தப் பெண், தற்போது, வீரமணி ஏமாற்றிவிட்டதாக புகார் அளித்துள்ளார். காவல் ஆணையர் அலுவலகத்தில் புகார் அளித்துள்ள அந்தப் பெண், தமது புகார் மீது புளிந்தோப்பு மகளிர் காவல் நிலைய போலீசார் நடவடிக்கை எடுக்க மறுப்பதாக வேதனை தெரிவித்தார். 


Next Story

மேலும் செய்திகள்