சாலையோரம் நின்ற லாரி மீது, சொகுசு கார் மோதி விபத்து : ஒரே குடும்பத்தை சேர்ந்த 5 பேர் உயிரிழப்பு

ராசிபுரம் அருகே சாலையோரம் நின்ற சரக்கு லாரி மீது, சொகுசு கார் மோதிய விபத்தில், ஓரே குடும்பத்தை சேர்ந்த 5 பேர் உயிரிழந்தனர்.
சாலையோரம் நின்ற லாரி மீது, சொகுசு கார் மோதி விபத்து : ஒரே குடும்பத்தை சேர்ந்த 5 பேர் உயிரிழப்பு
x
திருச்சியில் பொதுப்பணித்துறை ஆய்வாளராக பணியாற்றி வந்த அசோக்குமார், தனது குடும்பத்தினருடன் சீரடி சாய்பாபா கோயிலுக்கு சென்று விட்டு காரில் சொந்த ஊருக்கு திரும்பிக்கொண்டிருந்தார். ராசிபுரத்தை அடுத்த ரெட்டிபுதூர் பகுதியில் வந்தபோது, கார் கட்டுப்பாட்டை இழந்து, சாலையோரம் நின்ற சரக்கு லாரியின் பின்புறம் மோதி விபத்திற்குள்ளானது. இதில் அசோக்குமார், அவரின் மனைவி தேவிபிரியா, அவர்களது குழந்தை உள்ளிட்ட  5 பேர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர். இதனையடுத்து சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த நாமக்கல் ஆட்சியர் மெகராஜ், மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அருளரசு ஆகியோர்,  5 பேரின் உடல்களையும் மீட்டு பிரேத பரிசோதனைக்காக நாமக்கல் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். விபத்து குறித்து வழக்குப்பதிவு செய்த போலீசார்,  லாரி ஓட்டுநர் சப்தகிரியை பிடித்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

Next Story

மேலும் செய்திகள்