"சி.ஏ.ஏ. - என்.ஆர்.சி.க்கு எதிராக கோலமிடுங்கள்" - மகளிர் அணியினருக்கு கனிமொழி வேண்டுகோள்

குடியுரிமை திருத்தச் சட்டம் மற்றும் தேசிய குடிமக்கள் பதிவேடு ஆகியவற்றுக்கு எதிராக கோலம் மூலம் எதிர்ப்பு தெரிவிக்குமாறு திமுக எம்.பி. கனிமொழி, மகளிரணிக்கு வேண்டுகோள் விடுத்துள்ளார்
சி.ஏ.ஏ. - என்.ஆர்.சி.க்கு எதிராக கோலமிடுங்கள் - மகளிர் அணியினருக்கு கனிமொழி வேண்டுகோள்
x
சென்னை பெசன்ட் நகரில், கோலம் மூலம் எதிர்ப்பு தெரிவித்து பெண்கள் ஆர்ப்பாட்டம் செய்தனர். இதற்கு எதிர்ப்பு தெரிவித்த போலீசாருடன், வாக்கு வாதத்தில் ஈடுபட்டனர். இந்நிலையில், தமிழகம் முழுவதும் உள்ள திமுக மகளிரணியினர், தங்கள் வீட்டில், என்.ஆர்.சி மற்றும் சிஏஏ சட்டங்களுக்கு எதிராக கோலமிட்டு எதிர்ப்பு தெரிவிக்க மகளிரணி செயலாளர் கனிமொழி  அழைப்பு விடுத்துள்ளார். கட்சித் தலைவர் ஸ்டாலினின் அறிவுறுத்தலின்பேரில், இந்த அழைப்பை விடுத்துள்ளதாக அவர் தெரிவித்துள்ளார். 


Next Story

மேலும் செய்திகள்