இன்ஸ்டாகிராம் மூலம் சிறுமியை படமெடுத்த இளைஞர் : போக்சோ சட்டத்தில் கைது

பெண் குரலில் பேசி பதினாறு வயது சிறுமியை, ஆபாசமாக படம் எடுத்து மிரட்டிய மகேஷை, போக்சோ சட்டத்தில் கைது செய்த போலீசார், சிறையில் அடைத்தனர்.
இன்ஸ்டாகிராம் மூலம் சிறுமியை படமெடுத்த இளைஞர் : போக்சோ சட்டத்தில் கைது
x
சென்னை அடுத்த மணலியைச் சேர்ந்த பட்டதாரி இளைஞர் மகேஷ், இன்ஸ்டாகிராம் மூலம் பெண்களிடம், பெண் குரலில் பேசி பழகி வந்துள்ளார். இந்நிலையில், சென்னையை சேர்ந்த 16 வயது சிறுமியிடம் இன்ஸ்டாகிராம் மூலம் அறிமுகமாகி, நாளடைவில் நெருக்கமாக பழகியுள்ளார். இதைத் தொடர்ந்து, ஆசை வார்த்தைக் கூறி, தவறான உறவுக்கு அழைத்துள்ளார். இதனால், நட்பை துண்டித்த சிறுமியை வேறொரு போலி ஐடி மூலம் அழைத்து, கவுசல்யா என அறிமுகமாகி பேசியுள்ளார். அதோடு, பெண் குரலில் பேசி நம்ப வைத்த மகேஷ், சிறுமி குளிக்கும் காட்சியை பதிவு செய்ததாக கூறி மிரட்டியுள்ளார். பின்னர், வேறொரு இன்ஸ்டாகிராம் ஐடி மூலம் அழைத்து ஆபாச படம் குறித்து கூறி உறவுக்கு அழைத்துள்ளார். இதனால், அதிர்ச்சி அடைந்த சிறுமி, சம்பவம் குறித்து தாயாரிடம் கூறியுள்ளார். தாயார் அளித்த புகாரின் பேரில், மகேஷை, போக்சோ சட்டத்தில் கைது செய்த போலீசார், புழல் சிறையில் அடைத்தனர். 


Next Story

மேலும் செய்திகள்