பாக்கெட் சாராயம் குடித்து 2 பேர் பலி - நடவடிக்கை எடுக்க பொதுமக்கள் கோரிக்கை

கடலூர் மாவட்டம் விருதாச்சலம் அருகே பாக்கெட் சாராயம் குடித்து 2 பேர் பலியான சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
பாக்கெட் சாராயம் குடித்து 2 பேர் பலி - நடவடிக்கை எடுக்க பொதுமக்கள் கோரிக்கை
x
விருதாசலம் அருகே வள்ளிமதுரம்  கிராமத்தில் இருசக்கர வாகனத்தில் பாக்கெட் சாராயம் விற்பனை செய்து வருவதாகக் கூறப்படுகிறது. ஒரு பாக்கெட் 50 ரூபாய்க்கு விற்கப்படும் சாராயத்தை குடிக்கும் சிலர் அடிக்கடி உயிரிழக்கும் சம்பவம் தொடர்வதாக அப்பகுதி மக்கள் புகார் தெரிவிக்கின்றனர். இந்நிலையில் சபரிநாதன், தாண்டான் ஆகியோர் பாக்கெட் சாராயம் குடித்ததில் உயிரிழந்தனர். இதனால் பரபரப்பு ஏற்பட்டது. எனவே பாக்கெட் சாராயம் விற்பனையை தடுக்க வேண்டும் என அப்பகுதி மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். போன் செய்தால் பாக்கெட் சாராயம் தேடி வருவதாகவும் பொது மக்கள் குற்றம் சாட்டியுள்ளனர். 


Next Story

மேலும் செய்திகள்