இலவச மடிக்கணினி பெறாத மாணவர்கள் ஜன.11-க்குள் சான்றிதழ்களை வழங்க வேண்டும் - பள்ளிக்கல்வித்துறை

தமிழக அரசின் இலவச மடி கணினியை பெறாத மாணவர்கள், ஜனவரி 11ஆம் தேதிக்குள் சான்றிதழ்களை சமர்ப்பிக்க, பள்ளிக்கல்வித்துறை அறிவுறுத்தியுள்ளது.
இலவச மடிக்கணினி பெறாத மாணவர்கள் ஜன.11-க்குள் சான்றிதழ்களை வழங்க வேண்டும் - பள்ளிக்கல்வித்துறை
x
தமிழக அரசின் இலவச மடி கணினியை பெறாத மாணவர்கள், ஜனவரி 11ஆம் தேதிக்குள் சான்றிதழ்களை சமர்ப்பிக்க, பள்ளிக்கல்வித்துறை அறிவுறுத்தியுள்ளது. இதுதொடர்பாக பள்ளிக்கல்வித்துறை இயக்குநர் வெளியிட்டுள்ள சுற்றறிக்கையில், 2017-18 மற்றும் 2018-19ஆம் ஆண்டுகளில் 12ஆம் வகுப்பு தேர்ச்சி பெற்ற மாணவர்களில், மடி கணினியை பெறாதவர்கள், தாங்கள் உயர்கல்வி படித்து வருவதற்கான சான்றிதழை, ஜனவரி 11ஆம் தேதிக்குள் பள்ளி தலைமை ஆசிரியரிடம் சமர்ப்பிக்குமாறு தெரிவிக்கப்பட்டுள்ளது. அவ்வாறு  வழங்குபவர்களுக்கு உடனடியாக இலவச மடி கணினியை வழங்க அறிவுறுத்தியுள்ள அவர், தாமதமாக சான்றிதழ்களை  வழங்கினால் ஏற்கப்பட மாட்டாது என்றும் தெரிவித்துள்ளார்.

Next Story

மேலும் செய்திகள்