திருச்செந்தூர் ஆதித்தனார் கல்லூரியில் முன்னாள் மாணவர்கள் சந்திப்பு

திருச்செந்தூர் ஆதித்தனார் கலை மற்றும் அறிவியல் கல்லூரியில், கணினி அறிவியல் துறையின், முன்னாள் மாணவர் கூட்டமைப்பு சந்திப்பு நிகழ்ச்சி நடைபெற்றது.
திருச்செந்தூர் ஆதித்தனார் கல்லூரியில் முன்னாள் மாணவர்கள் சந்திப்பு
x
திருச்செந்தூர் ஆதித்தனார் கலை மற்றும் அறிவியல் கல்லூரியில், கணினி அறிவியல் துறையின், முன்னாள் மாணவர் கூட்டமைப்பு சந்திப்பு நிகழ்ச்சி நடைபெற்றது. இதில், வெளிநாடு மற்றும் பல மாநிலங்களிலிருந்து வந்து முன்னாள் மாணவர்கள் கலந்து கொண்டனர். விழாவில் தலைமையுரை ஆற்றிய கல்லூரி முதல்வர் மகேந்திரன்,  கணினி துறையின் ஆரம்ப கட்ட நிலை மற்றும் மாணவர்களின் தற்போதைய வளர்ச்சி பற்றி பேசினார். சிறப்பு விருந்தினராக கலந்து கொண்ட கணினி துறையின் முன்னாள் தலைவர் சேது ராமலிங்கம் பழைய நினைவுகளை பகிர்ந்து கொண்டனர். இவ்விழாவில், 1988 - 91ல் பயின்ற, முதலாமாண்டு மாணவர்கள் சார்பாக, கணினி துறைக்கு காணொளி காட்சி உபகரண பொருட்கள், பயின்றோர் கழக செயலாளரால், முதல்வரிடம் ஒப்படைக்கப்பட்டது.

Next Story

மேலும் செய்திகள்