ஆசிய சதுரங்க போட்டி- அருப்புக்கோட்டை அரசு பள்ளி மாணவன் தகுதி

ஆசிய சதுரங்க போட்டிக்கு அருப்புக்கோட்டையை சேர்ந்த அரசு பள்ளி மாணவன் தகுதி பெற்றுள்ளார்.
ஆசிய சதுரங்க போட்டி- அருப்புக்கோட்டை அரசு பள்ளி மாணவன் தகுதி
x
அருப்புக்கோட்டை வேலாயுதபுரத்தை சேர்ந்த சதுர்சான் என்ற மாணவன்,  முத்துராமலிங்கபுரம் அரசு மேல்நிலைப்பள்ளியில் ஏழாம் வகுப்பு படித்து வருகிறார். சிறுவயது முதலே சதுரங்கத்தில் அதிக ஈடுபாடு கொண்ட சதுர்சான் மாவட்ட, மாநில, தேசிய போட்டிகளில்  பதக்கங்களை குவித்துள்ளார்.  தற்போது தேசிய அளவிலான சதுரங்க போட்டியில்  12 வயதிற்குட்பட்டோர் பிரிவில் இந்திய அளவில் தங்கப் பதக்கத்தை வென்றுள்ளார்.  இதன் மூலம் வருகிற மே மாதம் அந்தமானில் நடைபெறும்  ஆசிய சதுரங்க போட்டியில் இந்தியா சார்பில் பங்கேற்கிறார். 


Next Story

மேலும் செய்திகள்