"ஜி.எஸ்.டி. வரி உயர்வுக்கு எதிர்ப்பு" - தமிழ்நாடு வணிகர் சங்கங்களின் பேரவை ஆர்ப்பாட்டம்

ஜி.எஸ்.டி. வரி இரண்டு மடங்கு உயர்த்தப்பட்டால், விலைவாசி மேலும் அதிகரிக்கும் என தமிழ்நாடு வணிகர் சங்கங்களின் பேரவை தலைவர் வெள்ளையன் தெரிவித்துள்ளார்.
ஜி.எஸ்.டி. வரி உயர்வுக்கு எதிர்ப்பு - தமிழ்நாடு வணிகர் சங்கங்களின் பேரவை ஆர்ப்பாட்டம்
x
ஜி.எஸ்.டி. வரி இரண்டு மடங்கு உயர்த்தப்பட்டால், விலைவாசி மேலும் அதிகரிக்கும் என தமிழ்நாடு வணிகர் சங்கங்களின் பேரவை தலைவர் வெள்ளையன் தெரிவித்துள்ளார். ஜிஎஸ்டி வரி உயர்வுக்கு எதிர்ப்பு தெரிவித்து அச்சங்கம் சார்பில் சென்னை சேப்பாக்கம் விருந்தினர் இல்லம் அருகே ஆர்பாட்டம் நடைபெற்றது. இதில் பங்கேற்ற பின் செய்தியாளர்களிடம் பேசிய வெள்ளையன்,  ஜிஎஸ்டி வரி உயர்வால் உள்நாட்டு வர்த்தகர்கள் பாதிக்கப்படுவார்கள் என்றும், அன்னிய நிறுவனங்களை  ஊக்குவிக்ககூடாது எனவும் கூறினார். 

Next Story

மேலும் செய்திகள்