சிறுமிக்கு திருமணம் நடைபெறுவதாக புகார் : திருமண வீட்டில் அதிகாரிகள் சோதனையால் பரபரப்பு

கோவையில் குழந்தை திருமணம் நடைபெறுவதாக வந்த புகாரின் பேரில், திருமண வீட்டில் அதிகாரிகள் சோதனை மேற்கொண்டதால் பரபரப்பு ஏற்பட்டது.
சிறுமிக்கு திருமணம் நடைபெறுவதாக புகார் : திருமண வீட்டில் அதிகாரிகள் சோதனையால் பரபரப்பு
x
கோவை நாகராஜபுரம் பகுதியில் மராட்டிய கணிக்கர் சமூகத்தை சேர்ந்த 200-க்கும் மேற்பட்ட குடும்பங்கள் வசித்து வருகின்றனர். இந்த சமுதாய வழக்கப்படி 5 ஆண்டுகளுக்கு ஒருமுறை நடைபெறும் திருமண நிகழ்ச்சி, தற்போது தொடங்கி நடைபெற்று வருகிறது. 10 நாட்கள் நடைபெறும் இந்த விழாவில், கிராமத்தில் உள்ள இளம் பெண்களுக்கும்,  ஆண்களுக்கு, திருமணம் செய்து வைக்கப்படும். நள்ளிரவு 12 மணிக்கு திருமணம் நடைபெற இருந்த நிலையில், சிறுமி ஒருவருக்கு திருமணம் நடைபெறுவதாக புகார் வந்தது. அதன்பேரில், குறிப்பிட்ட பெண்ணின் பெற்றோரிடம்,  குழந்தைகள் நலவாரிய அதிகாரிகள் விசாரணை மேற்கொண்டனர். அப்போது, பெண் திருமண வயதை எட்டியது உறுதியானது. இந்நிலையில், அப்பகுதியில் 17 வயது சிறுமிக்கு திருமணம் நிச்சயம் செய்யபட்டிருந்ததை அறிந்த அதிகாரிகள், அவரது பெற்றோரை எச்சரித்து சென்றனர். 

Next Story

மேலும் செய்திகள்