இடைத்தரகரை தாக்கிவிட்டு ரூ.18 லட்சம் கொள்ளை : சாலையில் கிடந்ததாக ரூ.10 லட்சத்தை ஒப்படைத்த வியாபாரி

சென்னை மண்ணடியில் பண பரிமாற்றம் செய்யும் இடைத்தரகரை தாக்கிவிட்டு 18 லட்சம் ரூபாயை வழிப்பறி செய்த கும்பலை போலீசார் தேடி வருகின்றனர்.
இடைத்தரகரை தாக்கிவிட்டு ரூ.18 லட்சம் கொள்ளை : சாலையில் கிடந்ததாக ரூ.10 லட்சத்தை ஒப்படைத்த வியாபாரி
x
சென்னை எம்.கே.பி நகர் பகுதியை சேர்ந்தவர் முகமது அபுபக்கர் சித்திக். இவரது பண பரிமாற்றம் செய்யும் அலுவலகத்திலிருந்து சுமார் 18 லட்சத்தை எடுத்துக்கொண்டு திருவல்லிக்கேணி சென்றுள்ளார். அப்போது 3 இருசக்கர வாகனத்தில் பின்தொடர்ந்து வந்த 7 பேர் அபுபக்கர் சித்திக்கை தாக்கி பணப்பையை பறித்துச் சென்றுள்ளனர். புகாரின்பேரில் சிசிடிவி காட்சிகளை வைத்து போலீசார் விசாரணை நடத்தினர். அப்போது காவல் நிலையத்திற்கு வந்த ஜூஸ் கடை நடத்தி வரும் தர்மதுரை என்பவர்,  பணப்பை  சாலையில் கிடந்ததாக கூறி ஒப்படைத்துள்ளார். அதில் 10 லட்சம் மட்டுமே இருந்தது. இதனால் சந்தேமடைந்த போலீசார் தர்மதுரை வீட்டில் சோதனை நடத்தியதில் 8 லட்சம் ரூபாய் சிக்கியது. ஆனால் தர்மதுரை தனக்கும் இந்த வழிபறிக்கும் எந்த சம்மந்தமும் இல்லையெனவும், வழியில் கிடந்ததால் பணப்பையை எடுத்ததாகக் கூறியுள்ளார். வழிபறி கும்பலோடு தர்மதுரைக்கு தொடர்புள்ளதா என்ற கோணத்தில் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். 

Next Story

மேலும் செய்திகள்