கே.கே. நகரில் சாக்கு மூட்டையில் வந்த ரூ.27 லட்சம்

சென்னையில் மூட்டை மூட்டையாக தனியார் சொகுசுப் பேருந்தில் வந்திறங்கிய 27 லட்சம் ரூபாயை போலீசார் பறிமுதல் செய்தனர்.
கே.கே. நகரில் சாக்கு மூட்டையில் வந்த ரூ.27 லட்சம்
x
சென்னை கே.கே. நகர் மருத்துவமனை அருகே, தனியார் பேருந்து மூலம் கோடிக் கணக்கான ரூபாய் கடத்தப்படுவதாக அந்த சரக போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்துள்ளது. அதைத் தொடர்ந்து சம்பவ இடத்துக்கு சென்று விசாரித்த போலீசார், சொகுசுப் பேருந்தில் இருந்து இறக்கப்பட்ட மூட்டைகளை மடக்கிப் பிடித்தனர். பின்னர், அந்த மூட்டைகளில் முழுக்க முழுக்க 10 ரூபாய் தாள் மற்றும் நாணயங்கள் இருந்தது தெரியவந்தது. இதைத் தொடர்ந்து போலீசார் நடத்திய விசாரணையில், 27 லட்சம் ரூபாய் பணம் கேரளா மாநிலம் எர்ணாகுளத்தில் இருந்து, சென்னைக்கு கொண்டுவரப்பட்டது தெரியவந்தது. விசாரணையில், திருவள்ளூரைச் சேர்ந்த ஐயப்பன் என்பவர் கொண்டு வந்ததும், சென்னையில் உள்ள மதுபான மற்றும் மளிகை கடைகளுக்கு சில்லரை கொடுப்பது அவரது தொழில் என்பதும் தெரியவந்தது. எனினும், 27 லட்சம் ரூபாய்க்கு உரிய ஆவணங்கள் இல்லாததால், அவை வருமான வரித் துறை அதிகாரிகளிடம் ஒப்படைக்கப்பட்டது. 

Next Story

மேலும் செய்திகள்