"சட்டவிரோத லாட்டரி விற்பனையை தடுக்க வேண்டும்" - அன்புமணி ராமதாஸ்

ஏழைகளை பலி வாங்கும் சட்டவிரோத லாட்டரி விற்பனையை தடுக்க வேண்டும் என பாமக இளைஞரணி தலைவர் அன்புமணி ராமதாஸ் தெரிவித்துள்ளார்.
சட்டவிரோத லாட்டரி விற்பனையை தடுக்க வேண்டும் - அன்புமணி ராமதாஸ்
x
ஏழைகளை பலி வாங்கும் சட்டவிரோத லாட்டரி விற்பனையை தடுக்க வேண்டும் என பாமக இளைஞரணி தலைவர் அன்புமணி ராமதாஸ் தெரிவித்துள்ளார்.  இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், 
நகை செய்யும் தொழிலாளி ஒருவர் லாட்டரி சீட்டுகளை வாங்கி கடனாளி ஆனதால், 3 குழந்தைகளை கொன்று விட்டு, மனைவியுடன் தற்கொலை செய்து கொண்டார்  என்ற செய்தி அதிர்ச்சி அளிப்பதாக தெரிவித்துள்ளார்.
சென்னை உள்ளிட்ட நகரங்களில் ஓர் இலக்க பரிசுச்சீட்டுகளும் மற்ற இடங்களில் 3 இலக்க லாட்டரி சீட்டுகளும் அதிக அளவில் விற்பனைசெய்யப்படுவதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.

Next Story

மேலும் செய்திகள்