கன்னியாகுமரி: குற்றங்கள் குறைய, விவசாயம் செழிக்க விரதம் இருந்து நேர்த்திக்கடன் செலுத்திய போலீசார்

கன்னியாகுமரி மாவட்டம் தக்கலையில் காவல்துறையினரும் பொதுப்பணித்துறையினரும் விரதம் இருந்து காவடி எடுத்து நேர்த்திக்கடன் செலுத்திய நிகழ்வு நெகிழ்ச்சியை ஏற்படுத்தியது.
கன்னியாகுமரி: குற்றங்கள் குறைய, விவசாயம் செழிக்க விரதம் இருந்து நேர்த்திக்கடன் செலுத்திய போலீசார்
x
கன்னியாகுமரி மாவட்டம் தக்கலையில் கார்த்திகை கடைசி வெள்ளியை முன்னிட்டு குற்றங்கள் குறைந்து மக்கள் நிம்மதியாக வாழ வேண்டி தக்கலை காவல் நிலையத்திலிருந்து போலீசாரும், காவல் துறை அதிகாரிகளும் காவடி பவனி சென்றனர். இதேபோல மழை பெய்யவும், நீர் வளம் செழிக்கவும், விவசாயம்  சிறப்பாக நடைபெறவும் வேண்டி பொதுப்பணி துறை அதிகாரிகளும் , ஊழியர்களும் காவடி பவனி சென்றனர். நெற்றிப்பட்டம் சூட்டிய யானை, பால்குடம் ஏந்தி முன் செல்ல மேளதாளத்துடன் காவடி  தூக்கி ஆடியவாறு, அதிகாரிகளும் போலீசாரும் பவனியாக சென்றது சக பக்தர்களையும், மக்களையும் நெகிழ்ச்சியடைய செய்த‌து. 

Next Story

மேலும் செய்திகள்