பிரசவத்திற்காக அனுமதிக்கப்பட்ட பெண் உயிரிழப்பு - ஆண் குழந்தை பிறந்துள்ள நிலையில் சோகம்

பிரசவத்திற்காக அனுமதிக்கப்பட்ட பெண் மருத்துவமனையில் உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
பிரசவத்திற்காக அனுமதிக்கப்பட்ட பெண் உயிரிழப்பு - ஆண் குழந்தை பிறந்துள்ள நிலையில் சோகம்
x
திருவண்ணாமலை மாவட்டம் செய்யாறு அரசு தலைமை மருத்துவமனையில் பிரசவத்திற்காக அனுமதிக்கப்பட்ட வினித்ரா என்பவருக்கு ஆண் குழந்தை பிறந்துள்ளது. 

இந்த நிலையில் வினித்ரா சிகிச்சை பலன் இன்றி திடீரென உயிரிழந்தார். இதனையடுத்து அவருக்கு உரிய சிகிச்சை அளிக்கவில்லை எனக்கூறி உறவினர்கள் மருத்துவமனையை முற்றுகையிட்டு ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். 

இதனையடுத்து மருத்துவமனை வளாகத்தில் போலீசார் குவிக்கப்பட்டனர். இந்த நிலையில் குடும்பத்தினர்கள் எதிர்ப்பையும் மீறி மருத்துவர்கள் வினித்ராவுக்கு குடும்ப கட்டுப்பாடு சிகிச்சை அளித்ததே உயிரிழப்புக்கு காரணம் என குற்றச்சாட்டு எழுந்துள்ளது.


Next Story

மேலும் செய்திகள்