சுகாதாரமற்ற முறையில் பானிபூரி தயாரிப்பு : பானிபூரி தயாரிக்க தடை

திருச்சி தேவதானம் பகுதியில் சுகாதாரமற்ற முறையில் பானிபூரி தயாரிக்கப்படுவதாக வந்த புகாரின் பேரில் உணவு பாதுகாப்பு அதிகாரி சித்ரா தலைமையிலான அதிகாரிகள் திடீர் சோதனை மேற்கொண்டனர்.
சுகாதாரமற்ற முறையில் பானிபூரி தயாரிப்பு : பானிபூரி தயாரிக்க தடை
x
திருச்சி  தேவதானம் பகுதியில் சுகாதாரமற்ற முறையில் பானிபூரி தயாரிக்கப்படுவதாக வந்த புகாரின் பேரில் உணவு பாதுகாப்பு அதிகாரி சித்ரா தலைமையிலான அதிகாரிகள் திடீர் சோதனை மேற்கொண்டனர். அப்போது, வடமாநிலத்தை சேர்ந்தவர்கள் தங்கி இருந்த ஒரு வீட்டில் சுகாதாரமற்ற முறையில் பானிபூரி தயாரித்து வந்தது தெரியவந்தது. அவர்களை எச்சரித்த அதிகாரிகள், அங்கிருந்த மைதா உள்ளிட்ட 50 ஆயிரம் ரூபாய் மதிப்புள்ள மூலப்பொருட்களை பறிமுதல் செய்தனர். மேலும், பானிபூரி தயாரிக்க தடை விதித்து அந்த குடோனை பூட்டி விட்டு சென்றனர். இது குறித்து பேட்டியளித்த சித்ரா, சுகாதாரமற்ற முறையில் தயாரித்து விற்கப்படும் பானிபூரி வகைகளை மக்கள்  தவிர்க்க வேண்டும் என கேட்டுக் கொண்டார்.


Next Story

மேலும் செய்திகள்