திருச்சி : வழிதவறி வந்த வடமாநில இளைஞருக்கு தர்ம அடி

திருச்சி மணப்பாறையில், புரியாத மொழியில் தெரியாத வீட்டிற்கு நுழைந்தவரை பொதுமக்கள் சரமாரியாக தாக்கியுள்ளனர்.
திருச்சி : வழிதவறி வந்த வடமாநில இளைஞருக்கு தர்ம அடி
x
திருச்சி மணப்பாறையில், புரியாத மொழியில் தெரியாத வீட்டிற்கு நுழைந்தவரை பொதுமக்கள் சரமாரியாக தாக்கியுள்ளனர். காட்டுப்பட்டி பகுதியில் வட மாநில இளைஞர் ஒருவர், அங்கு நின்று கொண்டிருந்த சிறுவன் ஒருவரிடம் பேசியுள்ளார். பின்னர் இந்த இளைஞர் வீட்டிற்குள் நுழைந்ததால் சிறுவன் கத்தி கூச்சலிட்டுள்ளார். இதனால் அங்கு திரண்ட பொதுமக்கள் அந்த இளைஞரை பிடித்து தர்ம அடி கொடுத்துள்ளனர். தகவலறிந்து சம்பவ இடத்திற்கு வந்த போலீசார் மேற்கொண்ட விசாரணையில், அந்த இளைஞர் மேற்குவங்க மாநிலத்தை சேர்ந்தவர் என்பதும் வழிதவறி மணப்பாறைக்கு வந்ததும் தெரியவந்தது.

Next Story

மேலும் செய்திகள்