தொழிலதிபர் விஷம் குடித்து தற்கொலை முயற்சி : கடன் தொல்லையால் விபரீத முடிவு

கும்பகோணத்தில் கடன் தொல்லையால், தொழிலதிபர் விஷம் குடித்து தற்கொலைக்கு முயன்ற சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
தொழிலதிபர் விஷம் குடித்து தற்கொலை முயற்சி : கடன் தொல்லையால் விபரீத முடிவு
x
கும்பகோணத்தில் கடன் தொல்லையால், தொழிலதிபர் விஷம் குடித்து தற்கொலைக்கு முயன்ற சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. கும்பகோணம் அண்ணலக்ரஹாரம் பகுதியை சேர்ந்த பிரபாகரன், அப்பகுதியில் வணிக நிறுவனம் ஒன்றை நடத்தி வருகிறார். இந்நிலையில், தொழில் செலவிற்காக, பல்வேறு நபர்களிடம் இருந்து, அவர் 25 லட்சம் கடன்பெற்றதாகவும் அதற்காக 45 லட்சம் ரூபாய் வரை வட்டி செலுத்தி உள்ளதாகவும் கூறப்படுகிறது. இந்நிலையில், கடந்த 2 மாதங்களாக வட்டி செலுத்ததால், கடன் கொடுத்தவர்கள் நெருக்கடி அளித்து வந்துள்ளனர்.  இதனால், மனமுடைந்த பிரபாகரன் நேற்று விஷம்குடித்து தற்கொலைக்கு முயன்றார். மயங்கிய நிலையில் கிடந்த அவரை, உறவினர்கள் மீட்டு, கும்பகோணம் அரசு மருத்துவமனையில் அனுமதித்தனர். அங்கு, மருத்துவர்கள் தீவிர சிகிச்சை அளித்து வருகின்றனர். இந்த சம்பவம் குறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.

Next Story

மேலும் செய்திகள்