வரும் 14ம் தேதி சென்னையில் நீராவி என்​ஜின் ரயில் இயக்கம் : டிக்கெட் கட்டணம் வெளியீடு, முன்பதிவு அறிவிப்பு

சென்னையில் வரும் 14-ம் தேதியன்று நீராவி எஞ்சின் ரயில் இயக்கப்பட உள்ளது.
வரும் 14ம் தேதி சென்னையில் நீராவி என்​ஜின் ரயில் இயக்கம் : டிக்கெட் கட்டணம் வெளியீடு, முன்பதிவு அறிவிப்பு
x
இது தொடர்பாக  தெற்கு ரயில்வே சென்னை மண்டலம் வெளியிட்டுள்ள அறிவிப்பில், எழும்பூர் - கோடம்பாக்கம் இடையே சிறப்பு நீராவி எஞ்சின் ரயில் இயக்கப்படுவதாகவும் அதில் 40 பேர் அமரும் வகையில் இருக்கைகள் அமைக்கப்பட்டுள்ளதாகவும் கூறப்பட்டுள்ளது. எழும்பூரில் பகல் 11 மணிக்கு புறப்பட்டு, 12.15 மணிக்கு கோடம்பாக்கத்தை ரயில் சென்றடையும் என கூறியுள்ளதோடு ஒரு நபருக்கு 500 ரூபாய் கட்டணமாக வசூலிக்கப்படும் எனவும் அறிவித்துள்ளது.  முதலில் வருபவர்களுக்கு முன்னுரிமை என்ற அடிப்படையில் முன்பதிவு டிக்கெட் விற்பனை செய்யப்படும் எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது. 

Next Story

மேலும் செய்திகள்