தொழில் நஷ்டம், கடன் தொல்லையால் விபரீத முடிவு : குடும்பத்துடன் தற்கொலை செய்துகொண்ட தொழிலாளி

தொழில் நஷ்டம், கடன் தொல்லை காரணமாக, 3 பெண் குழந்தைகளுக்கு சயனைடு கொடுத்து விட்டு, பொற்கொல்லர் ஒருவர் மனைவியுடன் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் விழுப்புரம் அருகே சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.
தொழில் நஷ்டம், கடன் தொல்லையால் விபரீத முடிவு : குடும்பத்துடன் தற்கொலை செய்துகொண்ட தொழிலாளி
x
விழுப்புரம் அருகே உள்ள சித்தேரிக்கரையை சேர்ந்தவர் அருள். 
தாலி செய்யும் தொழில் செய்து வந்த இவருக்கு சிவகாமி என்ற மனைவியும்,  5 வயதில் பிரியதர்ஷினி, 3 வயதில் யுவஷ்டி, ஒரு வயதில் பாரதி என 3 பெண் குழந்தைகள் இருந்தனர். தொழிலில் ஏற்பட்ட நஷ்டம் காரணமாக, கடன் வாங்கி குடும்பம் நடத்தி உள்ளார். வாங்கிய கடனை அடைக்க வழி தெரியாமல் திண்டாடிய அருள், கட்டிய வீட்டை விற்று கடனில் பெரும்பகுதியை அடைத்துள்ளார். தொழிலில் எதிர்பார்த்த வருமானம் கிடைக்காததால், விரக்தி அடைந்து 3 நம்பர் லாட்டரி சீட்டை வாங்குவதை வாடிக்கையாக கொண்டுள்ளார். ஒரு கட்டத்தில் கடன் அதிகமானதால், அதை திரும்ப கட்ட முடியாமல் திணறிய அருள், விரக்தியடைந்து குடும்பத்துடன் தற்கொலை செய்து கொள்ள முடிவெடுத்துள்ளார். அதன்படி, சயனைடு வாங்கி வந்து தனது 3 மகள்களுக்கும் கொடுத்து விட்டு, அதை வீடியோவாக எடுத்து தனது நண்பர்களுக்கு அனுப்பி உள்ளார். தொடர்ந்து மனைவியுடன் தானும் சயனைடு குடித்து, தற்கொலை செய்து கொண்டார்.

Next Story

மேலும் செய்திகள்