நடிகர் ரஜினியின் 70-ஆவது பிறந்தநாள் விழா : பிறந்தநாள் நிகழ்ச்சியில் பிரபலங்கள் பேச்சு

நடிகர் ரஜினிகாந்த் விரைவில் கட்சி தொடங்கி, ஆட்சியை பிடிப்பார் என்று, அவரது பிறந்தநாள் நிகழ்ச்சியில் பிரபலங்கள் தெரிவித்துள்ளனர்.
நடிகர் ரஜினியின் 70-ஆவது பிறந்தநாள் விழா : பிறந்தநாள் நிகழ்ச்சியில் பிரபலங்கள் பேச்சு
x
சென்னை தேனாம்பேட்டையில் உள்ள காமராஜர் அரங்கில், ரஜினிகாந்தின் 70 வது பிறந்தநாள் விழா நடைபெற்றது. இந்த விழாவில், மாற்றுத்திறனாளிகளுக்கு இருசக்கர வாகனம், ஏழை எளியோருக்கு நிவாரண தொகை மற்றும் நலத்திட்ட உதவிகள் வழங்கப்பட்டது. இந்த நிகழ்ச்சியில், சினிமா தயாரிப்பாளர்கள் கலைஞானம், கலைப்புலி தாணு, இயக்குனர்கள்  எஸ்.பி முத்துராமன், கே.எஸ்.ரவிக்குமார் ,பி. வாசு,  நடிகை மீனா, நடிகர் ராகவா லாரன்ஸ் மற்றும் கராத்தே தியாகராஜன் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர். விழாவில் பேசிய பிரபலங்கள் அனைவரும், ரஜினிகாந்த் நிச்சயம் அரசியலுக்கு வந்து மக்களுக்கு நல்லது செய்வார் என்று தெரிவித்தனர்.

Next Story

மேலும் செய்திகள்