வெளியூர் சென்று மீன் பிடித்ததால் ஒதுக்கி வைப்பு : கோட்டாட்சியரிடம் புகார் அளித்த மீனவர்

நாகை மாவட்டம் மயிலாடுதுறை அருகே பூம்புகார் மீனவர் காலனியைச் சேர்ந்த லட்சுமணன், விசைப்படகு வைத்து சீசனுக்கு ஏற்றவாறு பல்வேறு பகுதிகளுக்கு சென்று தங்கி மீன்பிடித் தொழில் செய்துவந்துள்ளார்.
வெளியூர் சென்று மீன் பிடித்ததால் ஒதுக்கி வைப்பு : கோட்டாட்சியரிடம் புகார் அளித்த மீனவர்
x
நாகை மாவட்டம் மயிலாடுதுறை அருகே பூம்புகார் மீனவர் காலனியைச் சேர்ந்த லட்சுமணன், விசைப்படகு வைத்து சீசனுக்கு ஏற்றவாறு பல்வேறு பகுதிகளுக்கு சென்று தங்கி மீன்பிடித் தொழில் செய்துவந்துள்ளார். இந்நிலையில், அக்கிராம பஞ்சாயத்தார்கள் வெளியூர் சென்று மீன் பிடிக்க லட்சுமணனுக்கு தடை விதித்துள்ளனர். மேலும், அவரது குடும்பத்தினரை ஊரை விட்டு ஒதுக்கி  20 லட்சம் ரூபாய் அபராதமும் விதித்துள்ளனர். லட்சுமணன் குடும்பத்தினரிடம் பேசுபவர்களுக்கு ஒரு லட்ச ரூபாய், அபராதம் விதிக்கப்படும் என தன்டோரா போட்டு கிராம மக்களுக்கு அறிவித்துள்ளனர். இது குறித்து,  
அவரது குடும்பத்தினர் மயிலாடுதுறை கோட்டாட்சியரிடம் புகார் மனு அளித்தனர். 

Next Story

மேலும் செய்திகள்