நாளை 9ம் வகுப்பு அரையாண்டு தேர்வு துவக்கம் : தமிழ் கேள்வித்தாள் முன்கூட்டியே வெளியானது - கல்வித்துறை விசாரணை

நாளை அரையாண்டு தேர்வு துவங்க உள்ள நிலையில் தமிழ் கேள்வி தாள் வெளியானதால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.
நாளை 9ம் வகுப்பு அரையாண்டு தேர்வு துவக்கம் : தமிழ் கேள்வித்தாள் முன்கூட்டியே வெளியானது - கல்வித்துறை விசாரணை
x
தமிழகம் முழுவதும் அரையாண்டுத் தேர்வுகள் தொடங்கி உள்ள நிலையில், ஒன்பதாம் வகுப்பு மாணவர்களுக்கான தேர்வுகள் நாளை 13 ஆம் தேதி துவங்கி, 23ஆம் தேதி வரை நடைபெறுகின்றன. ஒன்பதாம் வகுப்புக்கு மாவட்ட அளவில் பொதுத் தேர்வாக நடைபெறும் நிலையில், நாளை தமிழ் பாட தேர்வுக்கான கேள்வித்தாள் சமூகவலை தளங்களில் வெளியானதால் அதிர்ச்சி ஏற்பட்டுள்ளது. அது, கிருஷ்ணகிரி மாவட்டத்திற்கான கேள்வித்தாள் என தகவல் வெளியான நிலையில், அதை அந்த மாவட்டத்தின் முதன்மைக் கல்வி அலுவலர் முருகன் மறுத்துள்ளார். இந்நிலையில், வேறு எந்த மாவட்டத்தில் இருந்து  கேள்வித் தாள் வெளியானது அல்லது அது கல்வித் துறை அச்சடித்த கேள்வித்தாள்தானா என்பது குறித்து பள்ளிக் கல்வித் துறை விசாரணை நடத்தி வருகிறது. 

Next Story

மேலும் செய்திகள்