குடியுரிமை சட்ட திருத்த மசோதாவுக்கு எதிராக திமுக சார்பில் ஆர்ப்பாட்டம் அறிவிப்பு

குடியுரிமை சட்ட திருத்த மசோதாவுக்கு எதிராக திமுக சார்பில் ஆர்ப்பாட்டம் அறிவிக்கப்பட்டள்ளது.
குடியுரிமை சட்ட திருத்த மசோதாவுக்கு எதிராக திமுக சார்பில் ஆர்ப்பாட்டம் அறிவிப்பு
x
இது தொடர்பாக, திமுக தலைவர் ஸ்டாலின் வெளியிட்டுள்ள அறிக்கையில், மத்திய அரசுக்கு துணையாக நின்று, சிறுபான்மையினர் மற்றும் ஈழத் தமிழர்களுக்கு அதிமுக அரசு மன்னிக்க முடியாத துரோகத்தை செய்து விட்டதாகவும், மாநிலங்களவையில் அதிமுக அளித்த ஆதரவுதான் குடியுரிமை மசோதா நிறைவேற காரணமாக அமைந்து விட்டதாகவும் குறிப்பிட்டுள்ளார்.  மத்திய அரசின் சிறுபான்மை விரோத மற்றும் தமிழர் விரோத செயல்களுக்கு தொடர்ந்து ஆதரவளித்து வரும் அதிமுக அரசை கண்டிப்பதாகவும்  மாவட்டந்தோறும், மாவட்ட திமுக செயலாளர்கள் தலைமையில் டிசம்பர் 17ம் தேதியன்று கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெறும் எனவும் ஸ்டாலின் தெரிவித்துள்ளார். ஆர்ப்பாட்டத்தில் கட்சியின் அனைத்து நிர்வாகிகள் மற்றும் தொண்டர்கள் பெருமளவில் பங்கேற்க வேண்டும் எனவும் ஸ்டாலின் கேட்டுக் கொண்டுள்ளார். 

Next Story

மேலும் செய்திகள்