ரஜினி பிறந்தநாள் - வாழ்த்துச்சொல்ல குவிந்த ரசிகர்கள்

நடிகர் ரஜினியின் பிறந்தநாளையொட்டி, அவருக்கு வாழ்த்துச்சொல்ல நூற்றுக்கணக்கான பக்தர்கள் போஸ்தோட்டத்தில் உள்ள அவரது இல்லம் அருகே குவிந்ததால் பரபரப்பு ஏற்பட்டது.
x
நடிகர் ரஜினியின் 70வது பிறந்த தினத்தை அவரது ரசிகர்கள் உற்சாகமாக கொண்டாடி வருகின்றனர். சென்னை போயஸ் தோட்டத்தில் உள்ள ரஜினியின் இல்லம் அருகே அதிகாலையிலேயே குவிந்த ரசிகர்கள், அவருக்கு வாழ்த்துச்சொல்லி முழக்கங்களை எழுப்பினர்.  காத்திருந்த ரசிகர்களிடம்  ரஜினி இல்லத்தில் இல்லை என்ற தகவலை காவல்துறையினர் தெரிவித்ததையடுத்து அவர்கள் ஏமாற்றத்துடன் திரும்பி சென்றனர். சிலர் அங்கே வைக்கப்பட்டு இருந்த ரஜினியின் பதாகைக்கு இனுப்புகளை ஊட்டிவிட்டனர்.  வடசென்னை ரஜினி ரசிகர்களின் சார்பாக  மரக்கன்று  வழங்கப்பட்டது.  சைதாப்பேட்டை பகுதியை சேர்ந்த ரசிகர்கள் கோவிலில் பூஜை செய்து அந்த பிரசாதத்தை ரஜினிக்கு வழங்க கொண்டு வந்திருந்தனர்.

Next Story

மேலும் செய்திகள்