மாமல்லபுரத்தை அழகுபடுத்த கோரிய வழக்கு : ஜனவரி 2 ஆம் தேதிக்குள் அறிக்கை அளிக்க வேண்டும் - சென்னை உயர் நீதிமன்றம்

மாமல்லபுரத்தை அழகுபடுத்த கோரிய வழக்கில், ஜனவரி 2 ஆம் தேதிக்குள் அறிக்கை அளிக்க வேண்டும் என தமிழக அரசுக்கு சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
மாமல்லபுரத்தை அழகுபடுத்த கோரிய வழக்கு :  ஜனவரி 2 ஆம் தேதிக்குள் அறிக்கை அளிக்க வேண்டும் - சென்னை உயர் நீதிமன்றம்
x
மாமல்லபுரத்தை பாதுகாக்க கோரி, நீதிபதி கிருபாகரன் எழுதிய கடிதத்தின் அடிப்படையில், தாமாக முன் வந்து பொது நல வழக்காக விசாரித்த நீதிபதிகள் வினீத் கோத்தாரி, சரவணன் அடங்கிய அமர்வு, மாமல்லபுரத்தை மேம்படுத்த எடுக்கப்பட்ட நடவடிக்கைகள், ஒதுக்கப்பட உள்ள நிதி உள்ளிட்ட விவரங்களை ஆதாரத்துடன் அறிக்கையாக தாக்கல் செய்ய உத்தரவிட்டனர்.  இதற்கு அரசு சார்பில் அவகாசம் கோரிய நிலையில்,  ஜனவரி 2 ஆம் தேதிக்கு அறிக்கை அளிக்க வேண்டும் என்றும், தவறினால் செங்கல்பட்டு மாவட்ட ஆட்சியர் ஆஜராகும்படி உத்தரவிட நேரிடும் என எச்சரிக்கை செய்துள்ளனர்.

Next Story

மேலும் செய்திகள்