ரஜினியின் பிறந்தநாள் - ரஜினி ரசிகர்கள் கொண்டாட்டம்

ரஜினியின் பிறந்தநாளை அவரது ரசிகர்கள் உற்சாகமாக கொண்டாடினர்.
ரஜினியின் பிறந்தநாள் - ரஜினி ரசிகர்கள் கொண்டாட்டம்
x
நடிகர் ரஜினிகாந்தின் பிறந்தநாளையொட்டி புதுவை ரஜினி மக்கள் மன்றம் சார்பில் மணக்குள விநாயகர் கோவிலில் தங்கத்தேர் இழுத்து சிறப்பு வழிபாடு நடத்தப்பட்டது. அதில் பங்கேற்ற நூற்றுக்கும் மேற்பட்ட ரசிகர்கள் பொதுமக்களுக்கு இனிப்பு வழங்கினர்.

அதேபோல் ரஜினி பிறந்தநாளையொட்டி, பழனி முருகன் கோவிலில் தங்கத்தேர்  இழுத்து ரசிகர்கள் சிறப்பு வழிபாடு நடத்தினர். ஆயக்குடி சந்தையில் பொதுமக்களுக்கு இனிப்புகளை வழங்கிய ரசிகர்கள், அப்பகுதியில் 70 மரக்கன்றுகளை நட்டனர்.

ரஜினியின் பிறந்தநாளை கொண்டாடும் விதமாக அவரது ரசிகர்கள் இலவச பேருந்து பயணத்தை ராணிப்பேட்டை பொதுமக்களுக்கு ஏற்பாடு செய்திருந்தனர். ஆற்காட்டிலிருந்து கலவைக்கு ஒரு நாளைக்கு 7 முறை சென்று வரும் தனியார் பேருந்தை ஒப்பந்தம் செய்த ரசிகர்கள் அதற்கான மொத்த கட்டணத்தையும் செலுத்தினர். இதனை தொடர்ந்து பயணிகளை இலவசமாக ஏற்றிக்கொண்டு பயணித்தது அந்த பேருந்து. 

கும்பகோணத்தில் ரஜினிகாந்த் பிறந்த நாளை அவரது ரசிகர்கள் ஏழைகளுக்கு நலத்திட்ட  உதவிகள் வழங்கி கொண்டாடினர். நலத்திட்ட உதவிகளை பெற ஒரே நேரத்தில் ஏராளமான பெண்கள் குவிந்ததால் அங்கு கூட்ட நெரிசல் ஏற்பட்டது.
Next Story

மேலும் செய்திகள்