திருவாரூர்: மின்சாரம் தாக்கி 3 பேர் உயிரிழப்பு

திருவாரூர் அருகே வீட்டின் மேற்கூரையை சரிசெய்த போது 3 இளைஞர்கள் மின்சாரம் தாக்கி பரிதாபமாக உயிரிழந்தனர்.
திருவாரூர்: மின்சாரம் தாக்கி 3 பேர் உயிரிழப்பு
x
திருவாரூர் மாவட்டம் நன்னிலம் வட்டம் அண்டகுடி கிராமத்தை சேர்ந்த இளையராஜா மற்றும் அவரது சகோதரர் இளவரசன், உறவினர் பாரி ஆகிய 3 பேரும் வீட்டின் கூரையை சரி செய்யும் பணியில் ஈடுபட்டனர். அப்போது மழை நீர் புகாமல் தடுக்க தகரத்தை வைத்த போது மின்சார வயர் மீது உராய்வு ஏற்பட்டு மின்சாரம் பாய்ந்தது. இதில் சம்பவ இடத்திலேயே 3 பேரும் உயிரிழந்தனர். 

தகவலறிந்து வந்த போலீசார் உடல்களை கொண்டு செல்ல ஆம்புலன்ஸ் வர தாமதமானதால் காவலர் வாகனத்திலேயே ஏற்றி திருவாரூர் அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் பிரேத பரிசோதனைக்காக சேர்த்தனர். மின்சாரம் தாக்கி ஒரே குடும்பத்தை சேர்ந்த மூன்றுபேர் உயிரிழந்த சம்பவம் அப்பகுதி மக்களை சோகத்தில் ஆழ்த்தியுள்ளது.

Next Story

மேலும் செய்திகள்