நான் ஏன் பிறந்தேன்? - நித்தி புதுவிளக்கம்

பூமியில் இந்து மதத்தை மலர வைக்கவும் மக்களுக்கு அதை எடுத்துச்செல்வதற்காகவே தான் பிறந்தேன் என நித்தியானந்தா புதுவிளக்கம் கொடுத்திருக்கிறார்.
நான் ஏன் பிறந்தேன்? - நித்தி புதுவிளக்கம்
x
கைலாசா என்ற ஒரு நாட்டை நித்தி உருவாக்குகிறார் என்ற செய்தி வெளிவந்த நாளில் இருந்தே எந்த பக்கம் திரும்பினாலும் நித்தியை பற்றிய பேச்சாகவே இருக்கிறது. 

கைலாசாவில் குடியேற விண்ணப்பிக்கலாம் என்ற அறிவிப்பை தொடர்ந்து இதுவரை 12 லட்சம் பேர் குடியுரிமை கோரி விண்ணப்பித்துள்ளதாக புள்ளி விபரம் ஒன்று தெரிவிக்கிறது. 

கைலாசா தொடர்பான மீம்ஸ்கள் சமூக வலைத்தளங்களில் பட்டையை கிளப்பிக் கொண்டிருந்தாலும் மற்றொரு பக்கம் மிஸ்டர் கூல் ஆக சத்சங்கம் நிகழ்ச்சியில் மாஸ் காட்டிக் கொண்டிருக்கிறார் நித்தி. 

வெள்ளி இருக்கை நாக உருவ சிலை என தன் தோற்றத்திலும் அசத்தி வந்த நித்தி  சமீபத்தில் புலித்தோல் மீது அமர்ந்தபடி சற்று வித்தியாசமான தோற்றத்திலும் அசத்தினார். 

திருவண்ணாமலை தீபத்திற்கு வருவாரா? இல்லையா? என பெரிதும் எதிர்பார்க்கப்பட்ட நிலையில் தன் ஆசிரமத்தில் நடந்த தீப நிகழ்ச்சியை ஆன்லைனில் சிரித்த முகத்தோடு ரசித்து வணங்கினார் நித்தி... 

சத்சங்கம் நிகழ்ச்சியில் பேசிய நித்தி, இந்து மதம் தொடர்பாகவும், சுயசந்தேகத்தால் ஏற்படும் விளைவுகள் பற்றியும் தெளிவாகவே விளக்கினார். 

பூமியில் இந்து மதத்தை மலரச் செய்வதற்காகவே அவதரித்ததாக கூறும் நித்தி, தான் ஏன் பிறந்தேன் என்றும் அவர் பாணியிலேயே கூறியிருக்கிறார்.

இது எல்லாம் ஒரு புறமிருக்க, நித்தி எங்கே இருக்கிறார் என்பதை உடனே தெரிவிக்க வேண்டும் என்று கர்நாடக உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

ஒவ்வொரு முறையும் பழி சுமத்தப்படும் போதெல்லாம் தான் நேர்மையானவன் என்பதை நிரூபித்து வருவதாக கூறும் நித்தி, அடுக்கடுக்கான புகார்களுக்கு என்ன விளக்கம் சொல்ல போகிறார் என்பதை பொறுத்திருந்து பார்க்கலாம்... 




Next Story

மேலும் செய்திகள்