செங்கல்பட்டு: வெடிகுண்டு வெடித்ததால் பரபரப்பு - 63 வெடிபொருட்கள் மீட்பு

செங்கல்பட்டு அருகே திடீரென வெடிகுண்டு வெடித்தது குறித்து போலீசார் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
செங்கல்பட்டு: வெடிகுண்டு வெடித்ததால் பரபரப்பு - 63 வெடிபொருட்கள் மீட்பு
x
செங்கல்பட்டு அடுத்த அனுமந்தபுரம் பகுதியில் வசித்து வரும் ராமகிருஷ்ணன் என்பவர், ராணுவ பயிற்சி மையத்திற்கு அருகே விவசாயம் செய்து வருகிறார். இவர் பணியை முடித்து வீட்டிற்கு திரும்பி கொண்டிருந்த போது வயல்வெளியில் குண்டு ஒன்று இருப்பதை கண்டு வீட்டிற்கு எடுத்து சென்றார். அப்போது எதிர்பாராத விதமாக அந்த வெடிகுண்டு வெடித்ததில் ராமகிருஷ்ணன் மற்றும் கோவிந்தம்மாள் என்ற மூதாட்டி பலத்த காயமடைந்தனர். இருவரையும் அருகிலிருந்தவர்கள் மீட்டு சிகிச்சைக்காக செங்கல்பட்டு அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இதனிடையே ராமகிருஷ்ணன் வீட்டில் ஆய்வு நடத்திய 10-க்கும் மேற்பட்ட போலீஸார்  63 வெடிபொருட்களை கைப்பற்றினர். இதில் 10 பொருட்கள் ஆபத்தானவை என போலீஸார் தெரிவித்தனர்.


Next Story

மேலும் செய்திகள்