மெரினாவில் சமதள பாதையை நிரந்தரமாக்க மனு : அரசும், மாநகராட்சியும் ஒருவாரத்தில் பதிலளிக்க உத்தரவு

மெரினா கடற்கரைக்கு செல்லும் தற்காலிக சமதள பாதையை நிரந்தரமாக்குவது குறிதது, தமிழக அரசும், மாநகராட்சியும் பதிலளிக்க சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
மெரினாவில் சமதள பாதையை நிரந்தரமாக்க மனு : அரசும், மாநகராட்சியும் ஒருவாரத்தில் பதிலளிக்க உத்தரவு
x
மெரினா கடற்கரைக்கு செல்லும் தற்காலிக சமதள பாதையை நிரந்தரமாக்குவது குறிதது, தமிழக அரசும், மாநகராட்சியும் பதிலளிக்க சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. மாற்றுத் திறனாளிகள் தினத்தை முன்னிட்டு சென்னை மெரினா கடற்கரையில், மாற்றுத் திறனாளிகள் செல்ல ஏதுவாக சமதள பாதை அமைக்கப்பட்டது. இதை நிரந்தரமாக்க வேண்டும் என வேளச்சேரியை சேர்ந்த வழக்கறிஞர் கே.கேசவன், சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார். இதை விசாரித்த நீதிபதிகள், கிருபாகரன், வேல்முருகன் ஆகியோர் அமர்வு, மனுவின் கோரிக்கைக்கு தமிழக அரசும், மாநகராட்சியும் ஒரு வாரத்தில் விளக்கமளிக்க உத்தரவிட்டு, விசாரணையை தள்ளிவைத்தது.


Next Story

மேலும் செய்திகள்