எகிப்து வெங்காயம் இறக்குமதி எதிரொலி : கிலோ ரூ.130-க்கு விற்பனை

கோவை மார்க்கெட்டுக்கு, எகிப்து நாட்டிலிருந்து இறக்குமதி செய்யப்பட்ட வெங்காயம் விற்பனைக்கு வந்துள்ளது.
எகிப்து வெங்காயம் இறக்குமதி எதிரொலி : கிலோ ரூ.130-க்கு விற்பனை
x
கோவை மார்க்கெட்டுக்கு, எகிப்து நாட்டிலிருந்து இறக்குமதி செய்யப்பட்ட வெங்காயம் விற்பனைக்கு வந்துள்ளது. நாடு முழுவதும் வெங்காய தட்டுப்பாடு நிலவுவதால், எகிப்து, துருக்கி போன்ற நாடுகளில் இருந்து இறக்குமதி செய்ய மத்திய அரசு முடிவு செய்திருந்தது. இதனிடையே, பத்து நாட்களாக கப்பலில் பயணித்த வெங்காயம், விற்பனைக்காக கோவை கொண்டுவரப்பட்டது. தற்போது, இந்த வெங்காயம் கிலோ 130 ரூபாய்க்கு விற்கப்படுகிறது. வரத்து அதிகரிகும்பட்சத்தில் மேலும், விலை குறையுமென இறக்குமதியாளர்கள் தெரிவித்துள்ளனர்.

Next Story

மேலும் செய்திகள்