துணிக்கடையில் நூதன முறையில் திருட்டு : போலீஸ் பெயரைச்சொல்லி புதுத்துணி வாங்கிய இளைஞர்

திருப்பூர் மாவட்டம் அவினாசியில் காவல் ஆய்வாளர் பெயரை சொல்லி துணிக்கடையில் 15 ஆயிரம் ரூபாய் மதிப்பிலான ஆடைகளை வாங்கி மோசடி செய்த இளைஞரை போலீசார் தேடி வருகின்றனர்.
துணிக்கடையில் நூதன முறையில் திருட்டு : போலீஸ் பெயரைச்சொல்லி புதுத்துணி வாங்கிய இளைஞர்
x
திருப்பூர் மாவட்டம் அவினாசியில் காவல் ஆய்வாளர் பெயரை சொல்லி துணிக்கடையில் 15 ஆயிரம் ரூபாய் மதிப்பிலான ஆடைகளை வாங்கி மோசடி செய்த இளைஞரை போலீசார் தேடி வருகின்றனர். திருப்பூர் மாவட்டம் அவிநாசி - கோவை சாலையில் உள்ள தனியார் துணிக்கடைக்கு சென்ற இளைஞர் ஒருவர் 15 ஆயிரம் ரூபாய்க்கு புத்தாடைகள் வாங்கியுள்ளார். 
இதையடுத்து அந்த இளைஞர், அவிநாசி காவல் நிலைய ஆய்வாளர்தான் துணியை எடுத்து வரச் சொன்னதாகவும், தன்னோடு யாராவது ஒருவர் காவல் நிலையம் வந்து ஆய்வாளரிடம் பணம் பெற்றுக் கொள்ளுமாறும் கூறியுள்ளார்.

இதனையடுத்து தனது இருசக்கர வாகனத்தில் முன்னால் சென்ற அந்த இளைஞரை, துணிக்கடை ஊழியர்கள் பின் தொடர்ந்து சென்றுள்ளனர். ஆனால்,  போக்குவரத்து நெரிசலில் பின்தொடர முடியாத ஊழியர்கள்,  காவல் நிலையம் சென்று பார்த்தபோது அவர் மோசடி செய்தது தெரியவந்தது. இதையடுத்து கடை உரிமையாளர் புகார் அளித்ததையடுத்து, அங்கிருந்த கண்காணிப்பு கேமராவில் பதிவான காட்சிகளை கொண்டு போலீசார் விசாரணை மேற்கொண்டுள்ளனர்.

Next Story

மேலும் செய்திகள்