சேலம்: பாகனை மிதித்து கொன்ற கோயில் யானை
பதிவு : டிசம்பர் 03, 2019, 08:45 AM
சேலம் குரும்பப்பட்டி உயிரியல் பூங்காவில் பராமரிக்கப்பட்டு வந்த ஆண்டாள் யானை திடீரென ஆக்ரோஷமாகி பாகனை மிதித்துக் கொன்றது.
சேலம் குரும்பப்பட்டி உயிரியல் பூங்காவில் பராமரிக்கப்பட்டு வந்த ஆண்டாள் யானை திடீரென ஆக்ரோஷமாகி பாகனை மிதித்துக் கொன்றது. மதுரை கள்ளழகர் கோவிலில் இருந்து 2009 ம் ஆண்டு  கொண்டு வரப்பட்ட ஆண்டாள் என்ற  யானையை  காளியப்பன் என்பவர் பராமரித்து வந்துள்ளார்.  இந்நிலையில் யானையின் உடல் நிலையை மருத்துவர்கள்  பரிசோதித்து கொண்டு இருந்துள்ளனர். அப்போது அவர்களை யானை தாக்க முயற்சித்துள்ளது. இதனையடுத்து அதனை கட்டுப்படுத்த முயற்சித்த பாகன் காளியப்பனை யானை தாக்கியுள்ளது. அதில் காளியப்பன் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். பின்னர் யானைக்கு மயக்க ஊசி செலுத்தி ஒன்றரை மணி நேர போராட்டத்திற்கு பிறகு காளியப்பன் உடல் மீட்கப்பட்டது.  சுமார் 68 வயதான ஆண்டாள் யானை தாக்கியதில் இதுவரை 5 பேர் உயிரிழந்துள்ளனர்.

தொடர்புடைய செய்திகள்

சேலம் உருக்காலை - தனியார்மயமாக்கும் விவகாரம்:மத்திய அரசின் நடவடிக்கைக்கு திமுக எதிர்ப்பு

சேலம் உருக்காலையை தனியார்மயமாக்கும் திட்டத்தை மத்திய அரசு கைவிட வேண்டும் என அத்தொகுதியின் நாடாளுமன்ற உறுப்பினர் எஸ்.ஆர். பார்த்திபன் வலியுறுத்தியுள்ளார்.

20 views

"சேலம் இரும்பாலையை தனியாருக்கு விற்கக் கூடாது" - மக்களவையில் டி.ஆர்.பாலு கோரிக்கை

சேலம் இரும்பாலையை தமிழகத்தில் தி.மு.க. ஆட்சி அமைந்தவுடன், மாநில அரசு வாங்கிக் கொள்ளும் என்றும், தனியாருக்கு அதனை விற்கக் கூடாது எனவும் மக்களவையில், தி.மு.க. உறுப்பினர் டி.ஆர். பாலு தெரிவித்துள்ளார்.

15 views

பிற செய்திகள்

மக்கள் பயன்பாட்டில் இருந்த ஏரியில் முதலை - ஆபத்தை உணராமல் விளையாடிய இளைஞர்கள்

விருத்தாசலம் அருகே மக்கள் பயன்பாட்டில் உள்ள ஏரியில் இருந்த, முதலையால் பரபரப்பு ஏற்பட்டது.

0 views

மாற்றுத்திறனாளிகள் தினத்தையொட்டி சிறப்பு ரயில் பயணம்

மாற்றுத்திறனாளிகள் தினத்தையொட்டி மாற்றுத்திறனாளிகளை எழும்பூர் மெட்ரோ ரயில் நிலையத்தில் இருந்து விமானம் நிலையம் வரை மெட்ரோ ரயில் நிறுவனத்தினர் அழைத்து சென்றனர்.

9 views

சென்னை: தரைப்பாலத்தில் தேங்கிய மழை நீர் - தவறி விழுந்து தொழிலாளி உயிரிழப்பு

அம்பத்தூர் மண்ணூர்பேட்டை அருகே தரைப்பாலத்தில் தேங்கி நின்ற மழைநீரில் ஷேக் அலி என்கிற தொழிலாளி தவறி விழுந்து பலியான விவகாரத்தில் நெடுஞ்சாலைத்துறை அறிக்கை அளிக்க மாநில மனித உரிமை ஆணையம் உத்தரவிட்டுள்ளது.

8 views

பி.டி.அரசகுமாரின் படத்தை எரித்து பா.ஜ.க.வினர் போராட்டம்

பா.ஜ.க. மாநில துணை தலைவர் பி.டி.அரசகுமாரின் உருவப்படத்தை எரித்து கோவில்பட்டியில் அக்கட்சியினர் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

65 views

பொது மக்களிடம் ரூ.100 கோடி வசூலித்து மோசடி - ஆசை வலையில் வீழ்ந்த 12 ஆயிரம் பேர்

சென்னையில் நூறு கோடி ரூபாய் வசூலித்து மோசடி செய்த நிறுவனத்தை சேர்ந்த ஒருவரை பாதிக்கப்பட்ட பொதுமக்கள் பிடித்து போலீசில் ஒப்படைத்தனர்.

676 views

"அனைத்து கிராமங்களிலும் விவசாயிகள் சேவை மையம் தொடங்குக" - மக்களவையில் திமுக எம்.பி ஜெகத்ரட்சகன் வலியுறுத்தல்

அனைத்து கிராமங்களிலும் விவசாயிகள் சேவை மையம் தொடங்க வேண்டும் என்று நாடாளுமன்ற மக்களவையில் அரக்கோணம் தொகுதி உறுப்பினர் ஜெகத்ரட்சகன் தெரிவித்துள்ளார்.

34 views

ஒரு கட்டுரையை முறையான தலைப்புடன், குறைந்தபட்சம் 250 சொற்களுடன் பதிவேற்றவும்.

ஒற்றை படத்தில் ஒரு ஆயிரம் வார்த்தைகள் பேசுகிற ஒரு அழகான புகைப்படத்தை பொருத்தமான தலைப்பு மூலம் பதிவேற்றவும்.

குறைந்தபட்சம் 100 சொற்கள் கொண்ட ஒரு கட்டுரையை வீடியோ செய்தி மூலம் பதிவேற்றவும்.