தொடர் மழை - தொழில்கள் நஷ்டம், தொழிலாளர்கள் வேலை இழப்பு

தமிழகத்தில் கடந்த சில நாட்களாக பெய்து வரும் கனமழை காரணமாக பல்வேறு தொழில்களும் கடும் நஷ்டத்தினை சந்தித்துள்ளன.
தொடர் மழை - தொழில்கள் நஷ்டம், தொழிலாளர்கள் வேலை இழப்பு
x
தூத்துக்குடி, விருதுநகர், நெல்லை மாவட்டங்களில்  வேலைவாய்ப்பினை அளித்து வரும் தீப்பெட்டி உற்பத்தி தொழில் தொடர் மழை காரணமாக கடும் பாதிப்பினை சந்தித்துள்ளது. இதனால் தொழிலாளர்களுக்கு வேலை இழப்பு ஏற்பட்டுள்ளது. மூலப்பொருள்கள் கிடைப்பதில் சிரமம் ஏற்பட்டுள்ளதுடன் உற்பத்தி செய்த பண்டல்களை கொண்டு செல்ல முடியாத நிலை உள்ளதால் கடந்த 10 நாட்களில் சுமார் 300 கோடி ரூபாய் வரை இழப்பு ஏற்பட்டுள்ளதாக தீப்பெட்டி உற்பத்தியாளர்கள் கூறியுள்ளனர்.

நாமக்கல் மாவட்டம் ராசிபுரம் சுற்று வட்டார பகுதிகளில் 300 ஏக்கருக்கும் மேல் பயிரிடப்பட்டுள்ள சின்ன வெங்காய பயிர்கள் மழையால் அழுகி நஷ்டம் ஏற்பட்டுள்ளது. இன்னும் 10 நாட்களில் அறுவடைக்கு தயாராக இருந்த நிலையில்  வயல்வெளிகளில் தண்ணீர் தேங்கியுள்ளது. இதனால் வெங்காய பயிர்கள் அழுகி பல லட்சம் ரூபாய் நஷ்டம் ஏற்பட்டுள்ளதால் அரசு உரிய இழப்பீடு வழங்க வேண்டும் என விவசாயிகள்  கோரிக்கை விடுத்துள்ளனர்.

நெல்லை மாவட்டம் ராதாபுரம் சுற்று வட்டார பகுதிகளில்  500 க்கு மேற்பட்ட செங்கல் சூளைகளில் உற்பத்தி பாதிக்கப்பட்டுள்ளது. இங்கு தயார் செய்யப்படும் செங்கல் தரை ஓடுகள் பிற மாவட்டங்கள், மாநிலங்களுக்கும் விற்பனை செய்யப்படும் நிலையில் தற்போது உற்பத்தி நிறுத்தப்பட்டுள்ளதால் சூளை தொழிலாளர்கள் பாதிக்கப்பட்டுள்ளனர். மழை காலத்தில் செங்கல் விற்பனை குறைந்துள்ளதுடன் விலையும் குறைந்துள்ளதால்  சூளை உரிமையாளர்கள் நஷ்டத்தை சந்தித்துள்ளனர்.

கடலூர் மாவட்டம் குறிஞ்சிப்பாடி பகுதியில் மணிலா, மரவள்ளி கிழக்கு விவசாயம் பாதிக்கப்பட்டுள்ளது. எதிர்பாராத கனமழையின் காரணமாக 700 ஹெக்டேர் பரப்பளவில்  விவசாய நிலங்களில் மழைநீர் தேங்கி மணிலா மற்றும் மரவள்ளி பயிர்கள் அழுகியுள்ளன. கடந்த ஒரு வாரத்துக்கு முன்புதான் பயிரிட்ட நிலையில் விவசாயிகளுக்கு பெரும் பாதிப்பு ஏற்பட்டுள்ளது. மழைக்கால இழப்புகளுக்கு உரிய  நிவாரணம் அளிக்க வேண்டும் என மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.





Next Story

மேலும் செய்திகள்