12 ஆண்டுகளுக்கு பின் மனநல சிகிச்சை முடிந்து நாடு திரும்பும் வங்கதேச இளைஞர்

வங்கதேச நாட்டைச் சேர்ந்த முகமது கரீம் என்ற இளைஞருக்கு மனநல சிகிச்சை முடிந்த நிலையில், அவரை பெற்றோரிடம் ஒப்படைக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
12 ஆண்டுகளுக்கு பின் மனநல சிகிச்சை முடிந்து நாடு திரும்பும் வங்கதேச இளைஞர்
x
வங்கதேச நாட்டைச் சேர்ந்த முகமது கரீம் என்ற இளைஞருக்கு மனநல சிகிச்சை முடிந்த நிலையில், அவரை பெற்றோரிடம் ஒப்படைக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. 12 ஆண்டுகளுக்கு முன், எல்லை வழியாக இந்தியாவிற்குள் நுழைந்த அவர், கடந்த 6 ஆண்டுகளாக மனநலம் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்துள்ளார். தன்னார்வ தொண்டு அமைப்பு ஒன்று சிகிச்சை அளித்து வந்த நிலையில், குணமடைந்த அவர், வங்கதேச நாட்டைச் சேர்ந்தவர் என்பது தெரியவந்துள்ளது. இதையடுத்து டெல்லியில் உள்ள அந்நாட்டு தூதரகத்திற்கு தகவல் தெரிவிக்கப்பட்டு, முகமது கரீம், வங்கதேசம் நாட்டிற்கு செல்ல அனுமதி பெறப்பட்டது. அதன்படி சென்னையில் இருந்து கொல்கத்தாவிற்கு அவரை விமானம் மூலம் தொண்டு நிறுவனத்தினர் அழைத்துச் சென்றனர்.  தொடர்ந்து கொல்கத்தாவில் இருந்து இந்திய எல்லையில் தூதரக அதிகாரிகளிடம், முகமது கரீம் ஒப்படைக்கப்படுகிறார். பின்னர் வங்கதேச நாட்டு எல்லையில் அவரது பெற்றோருடன் ஒப்படைக்கப்பட உள்ளார்.

Next Story

மேலும் செய்திகள்