காஞ்சிபுரம் மாவட்டத்தில் பெண் காவலர் வீட்டில் தூக்கிட்டு தற்கொலை

காஞ்சிபுரம் மாவட்டம் வையாவூரை சேர்ந்த கோமதி என்ற பெண் காவலர், வீட்டில் தூக்கிட்டு தற்கொலை செய்துகொண்டார்.
காஞ்சிபுரம் மாவட்டத்தில் பெண் காவலர் வீட்டில் தூக்கிட்டு தற்கொலை
x
காஞ்சிபுரம் மாவட்டம் வையாவூரை சேர்ந்த கோமதி என்ற பெண் காவலர், வீட்டில் தூக்கிட்டு தற்கொலை செய்துகொண்டார். கருத்து வேறுபாடு காரணமாக கணவரை பிரிந்து வாழ்ந்து வந்த அவர் ஆறு மாதத்திற்கு முன் விவாகரத்து பெற்றுள்ளார். கணவரிடம் இருந்து விவாகரத்து பெற்றதால் கோமதி மிகுந்த மன உளைச்சலில் இருந்ததாக கூறப்படுகிறது. இந்த நிலையில்  வீட்டில் தனியாக இருந்த கோமதி  படுக்கை அறையில் துப்பட்டாவால் தூக்கு போட்டு தற்கொலை செய்து கொண்டார். இது குறித்து தகவல் அறிந்த காஞ்சிபுரம்  மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளர் சாமுண்டிஸ்வரி சம்பவ இடத்திற்கு சென்று விசாரணை நடத்தினார்.


Next Story

மேலும் செய்திகள்