தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் கன மழை

தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் இடி, மின்னலுடன் கூடிய கன மழை பெய்தது.
தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் கன மழை
x
திண்டுக்கல்

திண்டுக்கலில் சின்னாளப்பட்டி, செம்பட்டி, கள்ளிப்பட்டி, வடமதுரை உட்பட பல பகுதிகளில் பலத்த மழை பெய்தது. இதனால், சாலைகளில் மழை நீர் பெருக்கெடுத்து ஓடியது.

நெல்லை

நெல்லை மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் ஒரு மணி நேரத்திற்கு மேலாக இடி மின்னலுடன் கன மழை பெய்தது. இதனால் மாவட்டத்தின் பிரதான அணைகளுக்கு நீர்வரத்து அதிகரித்துள்ளது.

ஈரோடு

ஈரோடு மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில்  மழை வெளுத்து வாங்கியது. பெருந்துறை பவானி, கொடுமுடி, மொடக்குறிச்சி, அரச்சலூரில் கனமழை கொட்டித்தீர்த்தது.

மதுரை 

இதேபோல், மதுரை மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில்  மழை பெய்தது. இதனால் விவசாயிகள் மற்றும் பொதுமக்கள் மகிழ்ச்சி அடைந்தனர்.

Next Story

மேலும் செய்திகள்