வேர் அழுகல் நோயால் வெங்காயம் உற்பத்தி பாதிப்பு : ஆட்சியரிடம் விவசாயிகள் வெங்காய பயிருடன் புகார்

நாமக்கல் மாவட்ட ஆட்சியர் அலுவலக கூட்டரங்கில் மாதந்திர விவசாயிகள் குறைத்தீர் கூட்டம் ஆட்சியர் மெகராஜ் தலைமையில் நடைபெற்றது.
வேர் அழுகல் நோயால் வெங்காயம் உற்பத்தி பாதிப்பு : ஆட்சியரிடம் விவசாயிகள் வெங்காய பயிருடன் புகார்
x
நாமக்கல் மாவட்ட ஆட்சியர் அலுவலக கூட்டரங்கில் மாதந்திர விவசாயிகள் குறைத்தீர் கூட்டம் ஆட்சியர் மெகராஜ் தலைமையில் நடைபெற்றது. இதில் பங்கேற்ற விவசாயிகள், 3 ஆயிரம் ஏக்கர் பரப்பளவில் பயிரிடப்பட்டுள்ள வெங்காயம் வேர் அழுகல் நோயால் பாதிக்கப்பட்டுள்ளதாகவும், வேளாண்மைதுறை அதிகாரிகள் நடவடிக்கை எடுக்கவில்லை என்றும் குற்றஞ்சாட்டினர். அப்போது பேசிய ஆட்சியர் மெகராஜ், அரசு அதிகாரிகள் லஞ்சம் பெற்று கைது செய்யப்பட்டால் அவமானமாக கருதி தற்கொலை செய்து கொள்வதில்லை என்று தெரிவித்தார். ஆனால் கடன் வாங்கிய விவசாயிகள் கடனை கட்ட முடியாத நிலையில் அவமானம் தாங்காமல் தற்கொலை செய்து கொள்ளும் நிலை உள்ளதாக கூறினார்.  இதனால் விவசாயத்தையும், விவசாயிகளையும் அனைவரும் காக்க வேண்டும் என்றும் மாவட்ட ஆட்சியர் மெகராஜ்  தெரிவித்தார். 

Next Story

மேலும் செய்திகள்