திருச்சி ஆணையராக வரதராஜூ ஐ.பி.எஸ் நியமனம்

ஐ.பி.எஸ் அதிகாரிகளை இடமாற்றம் செய்து தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது. இது தொடர்பாக உள்துறை செயலர் நிரஞ்சன் மார்டி வெளியிட்டுள்ள உத்தரவில், மயிலாப்பூர் துணை ஆணையராக தேஷ்முக் சேகர் நியமிக்கப்பட்டுள்ளார்.
திருச்சி ஆணையராக வரதராஜூ ஐ.பி.எஸ் நியமனம்
x
ஐ.பி.எஸ் அதிகாரிகளை இடமாற்றம் செய்து தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது. இது தொடர்பாக உள்துறை செயலர் நிரஞ்சன் மார்டி வெளியிட்டுள்ள உத்தரவில், மயிலாப்பூர் துணை ஆணையராக தேஷ்முக் சேகர் நியமிக்கப்பட்டுள்ளார். தற்போது அந்த பொறுப்பில் இருக்கும் ஜெயலட்சுமி, இணைய குற்றத் தடுப்புப் பிரிவு சிபிசிஐடி எஸ்.பியாக மாற்றப்பட்டுள்ளார். திருச்சி மாநகர மத்திய மண்டல காவல் ஆணையர் வரதராஜு ,  திருச்சி ஆணையராக மாற்றப்பட்டுள்ளார். திருச்சி ஆணையர் அமல்ராஜ் மத்திய மண்டல காவல்துறை தலைவராக நியமிக்கப்பட்டுள்ளார். சென்னை மாநகர காவல் தலைமையக கூடுதல் ஆணையராக புதிதாக உருவாக்கப்பட்டுள்ள பொறுப்பில் ஜெயராம் நியமிக்கப்பட்டுள்ளார்.


Next Story

மேலும் செய்திகள்