வெளிநாட்டு ஆசிரியர்களின் சைக்கிள் பேரணி - யோகா கலை குறித்து விழிப்புணர்வு பயணம்

யோகாவை வலியுறுத்தி இந்தியா முழுவதும் வெளிநாட்டு ஆசிரியர்கள் சைக்கிள் பேரணியில் ஈடுபட்டுள்ளனர்.
வெளிநாட்டு ஆசிரியர்களின் சைக்கிள் பேரணி - யோகா கலை குறித்து விழிப்புணர்வு பயணம்
x
நார்வே நாட்டைச் சேர்ந்த சிவாங்கா அமெரிக்காவைச் சேர்ந்த ஹனி வேலூரைச் சேர்ந்த அஜய் மணிராஜ் ஆகியோர் இந்த சைக்கிள் பயணத்தை மேற்கொண்டுள்ளனர். கடந்த செப்டம்பர் மாதம் 3 ஆம் தேதி கன்னியாகுமரியில் துவங்கிய இவர்களது பயணம் கிருஷ்ணகிரி வந்தடைந்தது. ஒசூர் வழியாக கர்நாடகம் செல்லும் இந்தக் குழுவினர் இமயமலை வரை சென்று அங்குள்ள கிராமங்களில் உள்ள மாணவர்களுக்கு யோகா பற்றிய விழிப்புணர்வையும் மரம் நடுதல் குறித்த விழிப்புணர்வையும் ஏற்படுத்த உள்ளனர். Next Story

மேலும் செய்திகள்