கோவை: மாவோயிஸ்ட் உடல் உறவினர்களிடம் ஒப்படைப்பு - எரியூட்டு மையத்தில் உடல் தகனம்

தமிழக - கேரள எல்லையில் உள்ள மஞ்சகண்டி வனப்பகுதியில் கடந்த அக்டோபர் 28 மற்றும் 29 ஆம் தேதிகளில் நடைபெற்ற துப்பாக்கி சண்டையில் சிறப்பு அதிரடி படையினரால் நான்கு மாவோயிஸ்டுகள் கொல்லப்பட்டனர்.
கோவை: மாவோயிஸ்ட் உடல் உறவினர்களிடம் ஒப்படைப்பு - எரியூட்டு மையத்தில் உடல் தகனம்
x
தமிழக - கேரள எல்லையில் உள்ள மஞ்சகண்டி வனப்பகுதியில் கடந்த அக்டோபர் 28 மற்றும் 29 ஆம் தேதிகளில் நடைபெற்ற துப்பாக்கி சண்டையில் சிறப்பு அதிரடி படையினரால் நான்கு மாவோயிஸ்டுகள் கொல்லப்பட்டனர். இவர்களது உடல் திருச்சூர் அரசு மருத்துவமனையில் பதப்படுத்தி வைக்கப்பட்டிருந்தது. இதில் புதுக்கோட்டையை சேர்ந்த மாவோயிஸ்ட் கார்த்திக்கின் உடல் கடந்த 13ஆம் தேதி உறவினர்களிடம் ஒப்படைக்கப்பட்டு தகனம் செய்யப்பட்டது. இந்நிலையில் சென்னையை சேர்ந்த மாவோயிஸ்ட் சீனிவாசன் என்பவரது உடல் அவரது சகோதரர் ராஜகோபால் என்பவரிடம் ஒப்படைக்கப்பட்டு  கோவை நஞ்சுண்டாபுரம் பகுதியில் உள்ள எரியூட்டு மையத்தில் தகனம் செய்யப்பட்டது.

Next Story

மேலும் செய்திகள்