புதுக்கோட்டை: அரசு மருத்துவமனையில் காயத்துக்கு தையல் போட்ட பிணவறை ஊழியர்

அரசு மருத்துவமனைக்கு சிகிச்சைக்கு வந்தவருக்கு பிணவறை ஊழியர் தையல் போடும் வீடியோ காட்சி வெளியாகி சமூக வலைதளங்களில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
புதுக்கோட்டை: அரசு மருத்துவமனையில் காயத்துக்கு தையல் போட்ட பிணவறை ஊழியர்
x
அறந்தாங்கி பெரியாளுர் கிராமத்தைச் சேர்ந்த கார்த்தீபன் இரு சக்கர வாகன விபத்தில் காயம் ஏற்பட்டு அறந்தாங்கி அரசு மருத்துமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டார். அவரது காயத்துக்கு மருத்துவர்களோ செவிலியர்களோ தையல் போடாமல் காக்கி சீருடை அணிந்த பிணவறை ஊழியர் ஒருவர்  தையல் போட்டுள்ளார். இந்த வீடியோ காட்சிகள்  சமூக வலைதளங்களில் தற்போது வேகமாக வைரலாக பரவி வருவதுடன் அப்பகுதியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

Next Story

மேலும் செய்திகள்