கமலுக்கு காலில் அறுவை சிகிச்சை : மக்கள் நீதி மய்யம் தகவல்

மக்கள் நீதி மய்யத்தின் தலைவர் கமல் ஹாசனுக்கு காலில் டைட்டேனியம் கம்பி அகற்றும் சிகிச்சை நடைபெற உள்ளதாக அக்கட்சி சார்பில் அறிக்கை வெளியிடப்பட்டுள்ளது.
கமலுக்கு காலில் அறுவை சிகிச்சை : மக்கள் நீதி மய்யம் தகவல்
x
மக்கள் நீதி மய்யத்தின் தலைவர் கமல் ஹாசனுக்கு காலில் டைட்டேனியம் கம்பி அகற்றும் சிகிச்சை நடைபெற உள்ளதாக அக்கட்சி சார்பில் அறிக்கை வெளியிடப்பட்டுள்ளது. 2016 ஆம் ஆண்டு நடந்த விபத்து ஒன்றில் வலது காலில் முறிவு ஏற்படவே, கமல் காலில் டைட்டேனியம் கம்பி பொறுத்தப்பட்டதாக தெரிகிறது. அரசியல் மற்றும் சினிமா வேலைப்பளு காரணமாக அந்த கம்பி அகற்றப்படாமல் இருந்துவந்த நிலையில், வரும் 22 ஆம் தேதி அந்த கம்பியை அகற்றும் சிகிச்சை மேற்கொள்ளப்பட உள்ளது. இதையடுத்து சில நாள் ஓய்வுக்கு கமல் கட்சிப்பணிக்கு திரும்புவார் என மக்கள் நீதி மய்யத்தின் துணை தலைவர் மகேந்திரன் அறிக்கையில் கூறியுள்ளார்.  

Next Story

மேலும் செய்திகள்