சிறுமி பாலியல் பலாத்காரம் - 5 பேர் கைது

நாகை அருகே சிறுமியை பாலியல் பலாத்காரம் செய்து கர்ப்பமாக்கிய 8 பேர் மீது போக்சோ சட்டத்தின் கீழ் வழக்குப்பதிவு செய்த போலீசார், 5 பேரை கைது செய்தனர்.
சிறுமி பாலியல் பலாத்காரம் - 5 பேர் கைது
x
வேளாங்கண்ணியை சேர்ந்த மாணவி புதுச்சேரியில் விடுதியில் தங்கி ஒன்பதாம் வகுப்பு படித்து வருகிறார். கடந்த மே மாதம் விடுமுறையில் வேளாங்கண்ணிக்கு சென்றபோது சிறுமியின் தந்தைக்கு பழக்கமான  தாஸ் என்பவன், ஆசை வார்த்தை கூறி  சிறுமியை பாலியல் பலாத்காரம் செய்துள்ளான். இதனை அறிந்த அவனது நண்பர்களும் ​சிறுமியை பாலியல் பலாத்காரம் செய்துள்ளனர். இந்நிலையில், விடுமுறை முடிந்து புதுச்சேரிக்கு படிக்க செ‍ன்ற சிறுமி  சில வாரங்களுக்கு முன் விடுதியில் மயங்கி விழுந்துள்ளார். விடுதி காவலர்கள் மருத்துவமனை அழைத்துச் சென்ற போது சிறுமி கர்ப்பமாக இருந்தது தெரிய வந்தது. இதுகுறித்த அறிந்த தயார் சிறுமியிடம் விசாரித்த போது தாஸ், சூரியா உள்ளிட்ட 8 பேரும் பாலியல் பாலாத்காரம் செய்தது   தெரிய வந்தது. இதுதொடர்பான புகாரின் பேரில், தாஸ், ரூபன், காரல் மார்க்ஸ், வீரையன் உள்ளிட்ட 5 பேரை போக்ஸோ சட்டத்தின் கீழ் நாகை மகளிர் போலீசார் கைது செய்தனர். மேலும் பொன்னையன்,  முத்து , முருகன் உள்ளிட்ட 3 பேரை தேடி வருகின்றனர்.

Next Story

மேலும் செய்திகள்