நள்ளிரவில், சென்னையில் மிதமான மழை - வெப்பம் தணிந்ததால் பொதுமக்கள் மகிழ்ச்சி

சென்னை மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளில் பரவலாக மழை பெய்ததையடுத்து வெப்பம் தணிந்து குளிர்ச்சியான சூழல் நிலவியது.
நள்ளிரவில், சென்னையில் மிதமான மழை - வெப்பம் தணிந்ததால் பொதுமக்கள் மகிழ்ச்சி
x
வெப்பச்சலனம் காரணமாக, தமிழக கடலோர மாவட்டங்களில் லேசானது முதல் மிதமான மழை பெய்ய வாய்ப்பு உள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்திருந்தது. அதன்படி, சென்னையில் ஒரு சில இடங்களில் நேற்றிரவு திடீரென மழை பெய்தது. நள்ளிரவுக்கு மேல் பட்டினப்பாக்கம்,  கிண்டி, தரமணி, மீனம்பாக்கம், உள்ளிட்ட நகரின் சில இடங்களில் மிதமான மழை பெய்தது. இதனிடையே, கடலூர், கன்னியாகுமரி, விழுப்புரம் உள்ளிட்ட 15 மாவட்டங்களில் இடியுடன் கூடிய மழை பெய்ய வாய்ப்பு உள்ளதாகவும் வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

நாகை மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளில் பரவலாக கனமழை  பெய்தது. வெளிப்பாளையம், சிக்கல், அக்கரைப்பேட்டை, துறைமுகம் உள்ளிட்ட பகுதிகளில்  2 மணி நேரத்திற்கு மேல் கொட்டித்தீர்த்த கனமழையால் நீர்நிலைகள் மற்றும் ஏரிகள் நிரம்பின. ஒரு வார காலமாக வெயில் வாட்டி வந்த நிலையில், திடீரென பெய்த கனமழையால் விவசாயிகள் மற்றும் பொதுமக்கள் மகிழ்ச்சி அடைந்தனர்.

இதே​போல, திருப்பூர் மாவட்டம், தாராபுரத்தில், இரண்டு மணி நேரம் இடி மின்னலுடன் கனமழை பெய்தது. இதனால்,  முக்கிய சாலைகளில் மழைநீர் தேங்கி நின்றதால் வாகன ஓட்டிகள் கடும் சிரமத்திற்கு உள்ளாகினர்.

Next Story

மேலும் செய்திகள்