"கரும்பிற்கு மாற்று பயிராக 'சுகர் பீட்' எனும் புது ரகம்" - வேளாண் பல்கலைக்கழக துணைவேந்தர் தகவல்

கரும்பிற்கு மாற்றுப் பயிராக சுகர் பீட்டினை பயன்படுத்துவது தொடர்பாக சோதனை நடத்த உள்ளதாக தமிழ்நாடு வேளாண்மை பல்கலை கழக துணைவேந்தர் குமார் தெரிவித்துள்ளார்.
கரும்பிற்கு மாற்று பயிராக சுகர் பீட் எனும் புது ரகம் - வேளாண் பல்கலைக்கழக துணைவேந்தர் தகவல்
x
கரும்பிற்கு மாற்றுப் பயிராக சுகர் பீட்டினை பயன்படுத்துவது தொடர்பாக சோதனை நடத்த உள்ளதாக தமிழ்நாடு வேளாண்மை பல்கலை கழக துணைவேந்தர் குமார் தெரிவித்துள்ளார். கோவையில் கரும்பிற்கு மாற்றான பயிர் குறித்த கருத்தரங்கம் நடைபெற்றது. இதில் கலந்து கொண்டு பேசிய வேளாண் பல்கலைக்கழக துணைவேந்தர் குமார், கரும்பு 10 மாத பயிராக உள்ளதால் தண்ணீர் மற்றும் உற்பத்தி செலவு அதிகம் தேவைப்படுவதாக கூறினார். எனவே இதற்கு மாற்று பயிரான சுகர் பீட் எனும் பயிரை கரும்பு ஆராய்ச்சி மையங்களில் வரும் 1ஆம் தேதி முதல் சோதனை முறையில் பயிரிட உள்ளதாக தெரிவித்தார். ஏற்கனவே அமெரிக்கா மற்றும் ஐரோப்பிய நாடுகளில் இந்த வகை பயிர்கள் அதிக அளவில் பயிரிடப்பட்டுள்ளது எனவும், ஆராய்ச்சி முடிவின் அடிப்படையில், விவசாயிகளுக்கு இந்த வகை பயிர்கள் பரிந்துரைக்கப்படும் என்றும் கூறினார். 

Next Story

மேலும் செய்திகள்