பெற்ற பிள்ளையை போல வளர்த்த காளை உயிரிழந்த சோகம் : கிராம மக்கள் கண்ணீர் அஞ்சலி

தர்மபுரி மாவட்டம் பாலக்கோடு அருகே செவத்தாம்பட்டி கிராமத்தில் பெற்ற பிள்ளையை போல வளர்த்த காளை உயிரிழந்தது.
பெற்ற பிள்ளையை போல வளர்த்த காளை உயிரிழந்த சோகம் : கிராம மக்கள் கண்ணீர் அஞ்சலி
x
தர்மபுரி மாவட்டம் பாலக்கோடு அருகே செவத்தாம்பட்டி கிராமத்தில் விவசாயி நாராயணன் என்பவர் தன் காளையை பெற்ற பிள்ளையை போல வளர்த்து வந்துள்ளார். இந்த நிலையில் காளை உடல்நலக்குறைவால் உயிரிழந்த‌தால்,  உறவினர்கள் ஊர்மக்கள் அனைவருக்கும் தகவல் கூறி,  குடும்பத்தில் ஒருவர் உயிரிழந்த‌தை போல, இறுதி சடங்கு செய்துள்ளார். மேள தாளங்கள் முழங்க காளை, கிராம மக்களின் கண்ணீர் அஞ்சலிக்கு நடுவே நல்லடக்கம் செய்யப்பட்டது. 

Next Story

மேலும் செய்திகள்