முன்னாள் தலைமை தேர்தல் ஆணையர் டி.என். சேஷன் மறைவு : பிரதமர் மோடி, மம்தா பானர்ஜி உள்ளிட்ட பலர் இரங்கல்

முன்னாள் தலைமை தேர்தல் ஆணையர் டி.என். சேஷன் சென்னையில் காலமானார்.
முன்னாள் தலைமை தேர்தல் ஆணையர் டி.என். சேஷன் மறைவு : பிரதமர் மோடி, மம்தா பானர்ஜி உள்ளிட்ட பலர் இரங்கல்
x
டி.என். சேஷன் மறைவுக்கு குரோஷி உள்ளிட்டோர் இரங்கல்:

முன்னாள் தலைமை தேர்தல் ஆணையர் டி.என். சேஷன்  சென்னையில் காலமானார். அவருக்கு வயது 86. இந்திய தலைமை தேர்தல் ஆணையராக பணியாற்றி ஓய்வு பெற்ற டி.என். சேஷன் சென்னையில் வசித்து வந்தார். வயது மூப்பு காரணமாக அவர்  நேற்றிரவு காலமானார்.   
 
பிரதமர் மோடி, மம்தா பானர்ஜி உள்ளிட்ட பலர் இரங்கல்:

சேஷன் மறைவுக்கு பிரதமர் மோடி இரங்கல் தெரிவித்துள்ளார். டி.என். சேஷன் மிக  சிறந்த நிர்வாக அதிகாரி என்று குறிப்பிட்டுள்ள பிரதமர், அவர் 
மேற்கொண்ட தேர்தல் சீர்திருத்த நடவடிக்கைகள் மூலம் நாட்டின் ஜனநாயகம்  வலுப்பெற்று உள்ளதாக தெரிவித்துள்ளார். டி.என். சேஷன் மறைவுக்கு இரங்கல் தெரிவித்துள்ள மத்திய அமைச்சர் நிதின் கட்கரி, அவரது தேர்தல் சீர்திருத்த நடவடிக்கை வழிகாட்டும் விளக்காக திகழும் என்று குறிப்பிட்டுள்ளார். மேற்கு வங்க முதலமைச்சர் மம்தா பானர்ஜி விடுத்துள்ள இரங்கல் செய்தியில், ஜனநாயகத்துக்காக டி.என் சேஷன் ஆற்றிய பணிகள் எப்போதும் நினைவு கொள்ளப்படும் என்று தெரிவித்துள்ளார். முன்னாள்மத்திய அமைச்சர் சசிதரூர், முன்னாள் தலைமை தேர்தல் ஆணையர் குரோஷி உள்ளிட்ட பலரும் டி.என்.சேஷன் மறைவுக்கு 
இரங்கல் தெரிவித்துள்ளனர். 

 டி.என். சேஷன் மறைவுக்கு சோனியாகாந்தி இரங்கல்:

முன்னாள் தேர்தல் ஆணையர் டி.என். சேஷன் மறைவுக்கு, காங்கிரஸ் தலைவர் சோனியாகாந்தி இரங்கல் தெரிவித்துள்ளார். தேர்தலை வலுப்படுத்தும் கடுமையான, முன்மாதிரியான நடவடிக்கைகளை டி.என். சேஷன், அமைச்சரவை செயலாராக பணியாற்றியவர் என்பதையும் இரங்கலில் சோனியாகாந்தி குறிப்பிட்டுள்ளார்.

முன்னாள் தேர்தல் ஆணையர் டி.என்.சேஷனுக்கு முதலமைச்சர் இரங்கல்:

டி.என்.சேஷன் மறைவிற்கு முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி இரங்கல் தெரிவித்துள்ளார். இதுதொடர்பாக இன்று அவர்  வெளியிட்டுள்ள அறிக்கையில், இந்திய ஆட்சிப்பணி அதிகாரியாக இருந்த நாட்களில் சேஷன் பல்வேறு முக்கிய பொறுப்புகளை வகித்தவர் என்றும், தேர்தல் ஆணையராக இருந்த நாட்களில் பல்வேறு சீர்திருத்தங்களை கொண்டு வந்தவர் என்றும் தெரிவித்துள்ளார். சிறந்த நிர்வாகியாகவும், கடின உழைப்பாளியாகவும் இருந்த அவரை இழந்து வாடும் குடும்பத்தினருக்கு தன்னுடைய அனுதாபத்தை தெரிவித்துக் கொள்வதாகவும் தெரிவித்துள்ளார். 



Next Story

மேலும் செய்திகள்