வாகன தணிக்கையின் போது மூதாட்டி உயிரிழந்த சம்பவம் : காவலர்களை கைது செய்ய வேண்டும் - ராமதாஸ்

கள்ளக்குறிச்சியில் வாகன தணிக்கையின் போது மூதாட்டி உயிரிழந்த விவகாரத்தில் காவலரை கைது செய்ய வேண்டும் என பாமக நிறுவனர் ராமதாஸ் தெரிவித்துள்ளார்.
வாகன தணிக்கையின் போது மூதாட்டி உயிரிழந்த சம்பவம் : காவலர்களை கைது செய்ய வேண்டும் - ராமதாஸ்
x
கள்ளக்குறிச்சியில் வாகன தணிக்கையின் போது மூதாட்டி உயிரிழந்த விவகாரத்தில் காவலரை கைது செய்ய வேண்டும் என பாமக நிறுவனர் ராமதாஸ் தெரிவித்துள்ளார். அய்யம்மாள் என்ற மூதாட்டி தன் மகன் செந்திலுடன் இருசக்கர வாகனத்தில் சென்ற போது போலீசார் அவர்களின் வாகனத்தை தணிக்கை செய்ய முயன்றனர். அப்போது அய்யம்மாள் பலியான நிலையில் இதில் தொடர்புடைய காவல்துறை அதிகாரிகள் மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என ராமதாஸ் வலியுறுத்தியுள்ளார். மேலும் உயிரிழந்த மூதாட்டியின் குடும்பத்திற்கு 50 லட்ச ரூபாய் இழப்பீடு வழங்க வேண்டும் எனவும் அந்த அறிக்கையில் குறிப்பிட்டுள்ளார். 

Next Story

மேலும் செய்திகள்